
என்னுடைய வலைத்தளத்தில் இனித்தொடர்ந்து எதாவது ஒரு படைப்பாளியை அறிமுகப்படுத்தலாம் என்ற நோக்கத்தோடு எழுதி வருகிறேன். முதலில் நகுலன் இவர் எழுத்தாளர்களின் எழுத்தாளர் எனப் புகழுப்படுபவர். தமிழ்ச் சமூகத்தில் வாசிப்பு வெகுவாகக் குறைந்து வருகிற சூழலில் ஒரு படைப்பாளியை அறிமுகப்படுத்துவது என்பது அவசியமானது.திருவனந்தபுரத்தில் வசித்து வந்த நகுலன் ஆங்கிலத்துறைப் பேராசிரியர்.வாழ்நாள் முழுவதும் தனியாகவே வாழ்ந்து தன்னுடைய மனித வாழ்வை முடித்துக்கொண்ட ஒரு உன்னதமான படைப்பாளி. தன்னுடைய வீட்டில் தனக்குத் துணையாகப் பூனையை வளர்த்து வந்தார். குழந்தை மனம் கொண்ட படைப்பாளியாக வாழ்ந்தவர். இவரது படைப்புகள் நகுலன் கவிதைகள், மந்திரப்பூனை,வாக்குமூலம்,நாய்கள் போன்றவைகளாகும். குருஷேத்திரம் என்ற இவரது இலக்கியத் தொகுப்பு நூல் மிகவும் புகழ் பெற்றதாகும். இவருக்கு ஆசான் விருது மற்றும் விளக்கு விருது வழங்கப்பட்டுள்ளன.